Filter Coffeeயோ Cappuccinoவோ எதுவானாலும் சரி... நமக்கு coffee ராசியா இருக்கும் போலிருக்கு... அதனால coffeeஐ வச்சே பிள்ளையார் சுழி போடுவோம்.
Coffee அருந்துபவர்களில் ரெண்டு வகை இருக்காங்க... ஒன்று coffee குடிப்பவர்கள்.. மற்றொன்று coffee குடிகாரர்கள்... coffee குடிப்பவர்கள், சுமாராக ஒரு நாளைக்கு ஒரு coffeeயோ இல்ல ரெண்டு coffeeயோ குடிப்பாங்க.. ஆனால் இந்த coffee குடிகாரர்களுக்கு.... மந்திரவாதிகளின் உயிர் கிளிக்குள் இருக்கற மாதிறி, இவர்களின் உயிரே coffeeகுள் அடங்கி இருக்கிறது. இவர்களுக்கு coffee விஷயத்தில் discountயே கிடையாது.
உண்மையிலேயே coffeeல் ஒரு கிக் இருக்கு. நிமிஷதில் ஒருவரை refresh செய்திடும்... அதிலும் பிடித்தவர்களுடன் ஒரு கப் coffee சாப்பிடுவது ரொம்பவே special . அப்போது தான் coffee குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட coffee பிடிப்பது போல cappuccinoவும், espressoவும் குடிப்பார்கள்... ( Barista, Coffee day crowd இதற்கு உதாரணம்). தலைவலிக்கு, உலகத்துக்கே தெரிஞ்ச முதல் வைத்தியம் coffee. தலைவலிக்கும் போது ஒரு கப் coffee அடித்தால், தலை வலி பறந்து போயிடும்... (சில நேரம் coffeeக்காக கூட லேசாக தலை வலிப்பது போல் தோன்றும்).
Coffee குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்... விருந்தாலியாக யாரவது வீட்டுக்கு சென்றாலும் சரி, அவர்கள் formalityக்கு coffee சாப்பிடுங்கனு சொன்னா போதும்... அரை டம்ள்ர் போதும் என்பார்கள்.. (என்னவோ ஒரு டம்ள்ர் coffee கலக்குவதை விட அரை டம்ள்ர் கலக்குவது மிக மிக எளிமையானது போல). இவர்களுக்கு காலையிலும், மாலையிலும் coffee குடித்தே ஆக வேண்டும்.. அதுவும் மதிய full mealsக்கு பிறகு ஒரு 3.30 மணிக்கு மேல் ஒரு தூக்கம் வரும் பாருங்க... நம்ம மக்கள் நெழிகின்ற நெழியில் chairகளில் இருந்து வினோதமான சத்தங்கள் கூட வரும்... அப்போது காப்பிக்காரர் தான் தெய்வம்... அவருக்காக காத்திருப்பது... சொர்கவாசல் திரந்து தெய்வம் காட்சி அளிப்பது போல... கதவு காற்றுக்கு லேசாக திறந்தால் கூட காப்பிக்காரர் வந்துவிட்டார் என்று நினைத்து ஏமாறுவார்கள்.
இந்த coffee குடிக்காரர்கள் இருக்கிறார்களே... இவர்களுக்கு preference கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்... strongஆ, சக்கர mediumஆ இல்ல சக்கர துக்கல... இப்படி பல. அதிலும் இன்னும் சிலருக்கு coffee, sizzlers மாதிரி அடுப்போடு கொடுக்கனும்.. இல்லை என்றால்.. " coffee குடிச்ச மாதிரியே இல்ல... ஆரி போயிருந்தது" என்பார்கள். என்றைக்காவது ஒரு நாள் coffeeஐ கலக்கிய பிறகு லேசாக சூடு செய்தால் கூட மோப்ப சக்தியை வைத்தே கண்டு பிடித்துவிடுவார்கள் (குடிகார பசங்க).
இதயெல்லாம் இவங்க செய்தால் கூட... இவர்கள் மீது எனக்கு ஒரு soft corner இருக்கு. பாவம்... இவர்களுக்கு காலையில் எழுந்தவுடன் coffee குடித்தால் தான் கக்கா வருமாமே.. என்ன கொடும சரவணா!
(இப்ப ஒரு quiz - இந்த postல எத்தன தடவ 'coffee'ன்ற வார்த வந்துதுன்னு, correctஅ சொல்லுங்க பாப்போம்!)
Good you finally decided to express your views.
ReplyDeleteI appreciate.
Write well.
All THE BEST.
Nathan bless.
yeah definitely a refreshing cup of 'coffee'.
ReplyDeleteHappy blogging :)
Nice article, good insights about the relationship between coffee and humans...pretty witty as well. Nice going...
ReplyDeleteThanks so much for your support Nathan
ReplyDeleteVery sweet of you.... Thanks Vanitha!
ReplyDeleteI appreciate you trying to understand the article written in tamil and commenting. Thanks Kyle.
ReplyDeleteநல்ல வேளை நான் காப்பி குடிக்கிறது இல்லை. பதிவு நல்லா இருக்கு ருத்ரா. பதிவர் உலகத்துக்கு உன்னை வரவேற்கிறேன்.
ReplyDeleteha... ha... நன்றி சந்தோஷ்!
ReplyDeleteநல்ல பில்டேர் காபினா நாலு மையில் கூட நடப்பேன் -:)
ReplyDeleteஆனா தினமும் காபி குடிச்சே ஆகனம்ன்னு நினைக்குறது இல்ல
வாழ்த்துக்கள் நன்னா எழுதுங்கோ
மிக்க மகிழ்ச்சி பித்தன்!
ReplyDeleteநான் coffee குடிகாரன். உங்கள் பதிவு அற்புதம்.
ReplyDeleteஸ்ரீ....
வலையுலகத்திற்கு வரவேற்கிறேன்...
ReplyDeleteவாங்க.. வாங்க.. வந்து கலக்குங்க!
காபி ய சொல்லலைங்க!
You must read an article written by Sujatha on coffee sometime before '84.
ReplyDeleteNice script.. with practical thinking... Chinthala
ReplyDeleteமிக்க நன்று!! பதிவு அற்புதம்! Tea குடிகர்ரர்களை பற்றி உங்கள் கருத்து என்ன?:P
ReplyDeleteAarambame Aroma manaththudan amarkkalama irukku... I enjoyed the post as a Coffee kudikaaran. Keep blogging!!!
ReplyDelete-Kaarthik Anna